உலக விஷயங்கள் பற்றி எல்லாம் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கும் நமது பிரதமர் மோடி, பாஜக அரசின் ஊழல் விஷயத்தில் தொடர்ந்து மவுனமாக இருப்பது ஏன்?காங்கிரசின் திட்டங்களை எல்லாம் குறை கூறி ஆட்சிக்கு வந்தவர் நமது பிரதமர் மோடி. ஆட்சிக்கு வந்தபின்பு எதையெல்லாம் குறை கூறினாரோனா அதை எல்லாம் தீவிரமாக நடைமுறைப்படுத்திக்கொண்டு இருக்கிறார்- ஊழல் உட்பட. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பல ஊழல்களை நாம் கண்டிருந்தாலும் இந்த வியாபம் ஊழலும், அதைத் தொடர்ந்து நிகழும் மர்ம மரணங்களும் நம்மை ஆழ்ந்த சிந்தனையில் தள்ளியுள்ளது என்றே சொல்லலாம். இந்த ஊழல்கள் மூலம் இவர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. இனியும் மோடியின் அரசு ஊழலுக்கு எதிரானது என்றும், வளர்ச்சியின் நாயகன் இவர் என்றும் இவர்களின் சகாக்களும், சங்கபரிவாரங்களும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.'வியாபம்' என்பது மத்தியப் பிரதேத்தின் மாநில அரசுப் பணியிடங்களுக்கும், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கும் நுழைவுத் தேர்வு மூலம் உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் ‘பணியாளர் தேர்வாணையம்’ போன்ற அமைப்பு.இதன்மூலம் மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதில் ஆள் மாறாட்டம், புத்தகங்களை வைத்து பரீட்சை எழுத அனுமதிப்பது, பரீட்சை எழுதுவதற்கான அனுமதி அட்டையில் மோசடிகள், இப்படி பல்வேறு முறைகேடுகள் நடந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மோசடியாக தேர்வு பெற்றுள்ளனர்.இந்த பணியாளர் தேர்வாணையத்தில், அரசியல் செல்வாக்கும், பணபலமும், அதிகார துஷ்பிரயோகங்களும் இன்றைக்கு அங்கு ஆளும் பாஜக அரசு மூலம் புகுந்துள்ளது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் தொடங்கி பலர் மீது இந்த ஊழலில் குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன.
இந்த விசாரணையை முன்னின்று நடத்திய மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அருண் ஷர்மாவும், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்களை பேட்டி கண்ட தொலைக்காட்சி நிருபர் அக் ஷய் சிங்கும் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி பல்வேறு முறைகேடுகள் நடந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மோசடியாக தேர்வு பெற்று மருத்துவர்களாக பணியில் சேர்ந்தால் நாளைக்கு இவர்களிடம் மருத்துவம் பார்க்கச் செல்லும் மக்களின் நிலைமை என்ன ஆகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்?
நன்றி :- விகடன் செய்திகள்
No comments:
Post a Comment