நாட்டு மக்களுக்கோர் ஒரு நற்செய்தி
மத்திய ரயில்வே துறை அமைச்சராக பொறுப்பேற்ற முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா ரயில் கட்டணம் பிரதமர் மோடியிடம் ஆலோசனை செய்த பிறகு உயர்த்தப்படும் என்றார். இதையடுத்து ரயில் கட்டணம் ஜூன் 20ம் தேதி அன்று 14 சதவீதம் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது.அதன்படி இன்று ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ரயில் கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தியுள்ளது மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவில் உள்ளது. இந்நிலையில் ரயில் கட்டணம் வேறு கடுமையாக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment