இன்று (11-08-2015) ராஜபாளையம் கிளை பொது குழு கூட்டம் கிளை தலைவர் தோழர் அனவரதம் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது . கிளை செயலர் தோழர் முத்துராமலிங்கம் சமர்ப்பித்த ஆய்படு பொருள் மீது விவாதம் நடைபெற்றது .செப்டம்பர் 2 நடைபெற நிறுத்தத்தின் அவசியத்தையும் அதை வெற்றிகரமாக்க வேண்டிய கட்டாயத்தையும் மாவட்ட உதவி தலைவர் கண்ணன் ,மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஆகியோர் வலியுறுத்தி பேசினர் .பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டை களமாக இந்திய தேசத்தை ஆக்கும் மத்திய அரசின் போக்கை தோழர் மதி கண்ணன் கதைகள் கூறி எடுத்துரைத்தார் .மாவட்ட செயற்குழுவின் முடிவுகளை விளக்கி மாவட்ட செயலர் பேசினார் . ஸ்தல மட்ட பிரச்சனைகளை கையாள்வதில் மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விளக்கி தோழர் சமுத்திரகனி விளக்கினார் .LCM உறுப்பினர் தோழர் தங்கதுரை ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் சிவஞானம் ஆகியோர் செப்டம்பர் 2 போராட்டத்தை பற்றி பேசினர் . மாவட்ட உதவி செயலர் தோழர் வெங்கடேஷ் நன்றியுரையோடு மாவட்ட சங்கத்தின் செயல்பாட்டை விரிவாக கூறினார் .பெரும் அளவில் ஊழியர்கள் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment