Saturday, April 26, 2014

ஏப்ரல் 25 - புதுமைப்பித்தன் பிறந்தநாள்

படம் : அருணோதயம்
            நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான புதுமைப் பித்தன் பிறந்தநாள். 108 ஆண்டுகளுக்கு முன் பிறந்த புதுமைப்பித்தன் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சிறுகதைகள் ‘பொன்னகரம்’ மற்றும் ‘துன்பக்கேணி’. பொன்னகரம் (1934) அன்றைய சென்னையின் சேரிப்பகுதியைச் சேர்ந்த அம்மாளு என்ற பெண் தன் கணவனின் மருத்துவச் செலவிற்காக கற்பை மீறுவது தொடர்பான கதை. மருத்துவம் அன்றைக்கும் வணிகமாகத்தான் இருந்தது என்பதையும், கற்பு என்பது ஒருவகையில் மேலாதிக்கக் கற்பிதம்தான் என்பதை நிலைநிறுத்துத முயன்ற கதை. துன்பக்கேணி சென்ற நூற்றாண்டில் இலங்கை முதலான நாடுகளுக்கு தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்ட தலித்துகளின் வாழ்வைப் பிரதிபலித்தது. இவ்விரு கதைகளும் சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் பாடங்களாக இருந்து வந்தன. ஜெய்சாம்யாக் என்பவர் தொடுத்த ‘துன்பக்கேணி’ என்ற சிறுகதையை பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற வழக்கினைக் காரணம்காட்டி இச்சிறுகதை நீக்கப்பட்டது. துணையாக பொன்னகரமும் கல்விச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் இடம் மறுக்கப்பட்ட புதுமைப்பித்தனை, அவரது பிறந்தநாளில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தன் படைப்புகளில் பிரதிபலித்த நவீன இலக்கியத்தின் முன்னோடியாக நினைவு கூர்வோம்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...