30 வது தேசிய கவுன்சில் கூட்டம் இன்று (23-04-2014) அன்று நடைபெற்றது ஸ்ரீ A .N .ராய் , தேசிய கவுன்சில் ,சேர்மன் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது .நீண்ட நிலுவையில் உள்ள உண்மையான பிரச்சினைகளை தீர்ப்பதில் , நிர்வாகத்தின் அலட்சிய போக்கை ஊழியர் தரப்பு கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தது ஊழியர்களுக்கு சம்பளம் பெருமளவில் கொடுப்பதால் தான் பெரும் இழப்பு நமது நிறுவனத்திற்கு ஏற்பட்டது போல் நமது CMD அவர்கள் அடிக்கடி அறிக்கை விடுவதை ஊழியர் தரப்பு ஆட்சேபனை செய்துள்ளது .நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும் போது உயர்மட்ட அதிகாரிகள் ஆடம்பர செலவுகளை பெருமளவில் செய்வதை ஊழியர் தரப்பு சுட்டி காட்டி உள்ளது .அதே போல் டவர்களை பராமரிக்க ஒரு தனி துணை நிறுவனத்தை உருவாக்குவதையும் ,அதில் மூலதன ,தொழில் நுட்ப பார்ட்னெர் ஆக தனியார் நிறுவனத்தை அனுமதிப்பதையும் ஊழியர் தரப்பு மிக கடுமையாக எதிர்த்து உள்ளது . பி எஸ் என் எல் வாரியத்தின் இந்த முடிவை ரத்து செய்ய ஊழியர் தரப்பு வலியுறுத்தி உள்ளது .விவாதங்களின் ஒரு சுருக்கமான அறிக்கை நாளை நமது அனைத்திந்திய வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment