Thursday, April 13, 2017

பட்டுக்கோட்டையார் பிறந்தநாள்.

         ‘நான் அமர்ந்திருக்கம் முதலமைச்சர் நாற்காலியின் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களால் ஆனது’ என்று முன்னால் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனால் நினைவுகூறப்பட்ட மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்தநாள் (1930) ஏப்ரல் 13.


குட்டிஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா! -                (உனக்கு
மனக்கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்தலாபம் மதிமந்தமடா -(உனக்கு

கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்டு மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா! – காலை
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே
கணக்குத் தீர்ததிடும் சொந்தமடா (உனக்கு

பாபச் சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல்வேஷக் காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்க ளானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா!
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் _ முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் _ மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்அவரு
செவருவச்சுக் காத்தாலும் செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்தபின்னே அத்தனைக்கும் சொந்தக்காரன் யாரு? _ நீ
துணிவிருந்தாக் கூறு! _ ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு! _ அவர் எங்கே போனார் பாரு!     – அவரு

பொம்பளை எத்தனை? ஆம்பிளை எத்தனை?
பொறந்த தெத்தனை? எறந்த தெத்தனை?
வம்பிலே மாட்டிப் போன தெத்தனை?
மானக் கேடாய் ஆன தெத்தனை?
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
அடியே முத்துக்கண்ணு _ இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம்! ஆனந்தம்!               (உனக்கு

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...