சபாஷ் ! இது தான் பி எஸ் என் எல் ஊழியர் சங்கம்
மத்திய பிரதேச மாநில இந்தூர் பி எஸ் என் எல் ஊழியர் மாவட்ட சங்கம் 18-01-2014 அன்று வாடிக்கையாளர் மகிழ்விப்பு மேளாவை சிறப்பாக நடத்தியது.அம் மேளாவில் 522 சிம் விற்பனை செய்யப்பட்டது.மேலும் 11 FTTH இணைப்புகள் கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்டன . மேளாவில் கலந்து கொண்ட மத்திய பிரதேச மாநில தலைமை பொது மேலாளர் N .K .யாதவ் நமது முயற்சிகளை பாராட்டினார் .தொழிற்சங்கங்களின் இது போன்ற ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் பிஎஸ்என்எல் நிதி ஆதாரத்தை வலுவடைய செய்யும் என பொது மேலாளர் அவர்கள் குறிப்பிட்டார் . நமது மத்திய சங்கம் இந்தூர் மாவட்ட சங்கத்திற்கு தனது பாராட்டை தெரிவிப்பதோடு, இம் முயற்சியை தேசமே ஒரு உதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை எதிர்த்து போராடும் அதே நேரத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பாற்ற இது போன்ற முயற்சிகள் மிகவும் அவசியம் ஆகிறது . மேளா நிகழ்ச்சியை பார்க்க :-Click Here
No comments:
Post a Comment