நான்காம் தலைமுறை அலைக்கற்றையை BSNL நிறுவனத்திற்கு வழங்கிடு ,3 வது ஊதிய மாற்றத்தை BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக அமல்படுத்திடு ,1-1-2017முதல்BSNL ஓய்வூதியர்களுக்கு பென்ஷனை மாற்றிடு , பென்ஷன் பங்கீட்டு தொகையை வாங்குகின்ற ஊதியத்தில் கணக்கீடு ,போன்ற கோரிக்கைகளில் நமது துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற கோரி விருதுநகர் மாவட்டத்தில் PGM அலுவலகம் முன்பாக இன்று முதல் (24/07/2018) 3 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தின் முதல் நாள் தோழர் K .R .கிருஷ்ணகுமார் ,BSNLEU மாவட்ட துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது .உண்ணா விரத போராட்டத்தை BSNLEU மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி முறையாக தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் .கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,SNEA மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் ,AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் ,BSNLEU சங்கம்சார்பாக தோழர்கள் இளமாறன் ,இன்பராஜ் ,முனியாண்டி ,குருசாமி ,சந்திரசேகரன் ,முத்துசாமி ,ராஜேந்திரன் ஆகியோரும் ஓய்வூதியர் சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் அய்யாசாமி ,சிவஞானா ம் ,தோழர் புளுகாண்டி ,ஜெயராஜ் ஆகியோர் பேசினர் .












No comments:
Post a Comment