பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் பொதுவேலை நிறுத்தம் செய்வது என்று சிஐடியு, தொமுச, ஐஎன்டியுசி, ஏஐடியுசி உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர், மாநில அரசு ஊழியர், வங்கி காப்பீடு, தொலைதொடர்பு, பாதுகாப்புத்துறை போன்ற 40க்கும் மேற்பட்ட துறை வாரியான சம்மேளனங்களும் இணைந்து அறிவிப்பு விடுத்துள்ளன.
விலைவாசியை கட்டுப்படுத்து, வேலைபாதுகாப்பை உறுதிபடுத்தி வேலை வாய்ப்புகளை பெருக்கு, தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்து, ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பை உறுதி செய், தொழிற்சங்க உரிமைகளை அமல்படுத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
பொதுத்துறையை விற்பனை செய்வது, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூலதனத்தை அனுமதிப்பது, பொதுவினியோக பொருட்களுக்கு பணம் தந்து விடுவோம் என்று கூறி படிப்படியாக உணவு மானியத்தை கைவிடும் முயற்சியில் ஈடுபடுகின்ற மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் நமது BSNLEU முழுமையாக பங்கேற்க உள்ளது.
பிப்ரவரி 20, 21 தேதிகளில் நடைபெறும் அனைத்திந்திய வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்திட நமது மாவட்ட சங்கம் அனைவரையும் கேட்டு கொள்கிறது.
No comments:
Post a Comment