15/11/2018 அன்று மாலை 530 மணிக்கு மேல் BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களின் சாத்தூர் கிளை மாநாடு சாத்தூர் தொலை பேசி நிலைய வளாகத்தில் அதன் தலைவர் தோழர் ஜெயச்சந்திரன் தலைமையில் எழுச்சிகரமாக நடைபெற்றது . மாவட்ட செயலர் ரவீந்திரன் முறையாக கிளை மாநாட்டை வைத்து உரை நிகழ்த்தினார் .அக் கிளை மாநாட்டில் தோழர்கள் ஜெயச்சந்திரன் ,காதர் மொய்தீன் ,மோகனசுந்தரம் ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் ,பொருளாராக தேர்வு செய்யப்பட்டனர் .அக் கூட்டத்தில் பணி நிறைவு பெற்ற தோழர் வெங்கடேசன் ,,JTO, சிவகாசி அவர்கள் கவுரவிக்கப்பட்டார் .தோழர் வெங்கடேசன் அவர்கள் BSNLEU மற்றும் TNTCWU சங்கங்களுக்கு தலா ரூபாய் 500 நன்கொடை வழங்கினார் இக் கூட்டத்தில் கதிரேசன் ,JTO, ஓய்வூ தியர் சங்க தோழர் ராஜேந்திரன் ,மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் மாநில அமைப்பு செயலர் சமுத்திரக்கனி ஆகியோர் பங்கேற்றனர் .







No comments:
Post a Comment