விருதுநகர் மாவட்டம் முழுவதும் வரும் ஜனவரி 8,9 தேதிகளில் நடைபெற இருக்கும் பொது வேலை நிறுத்த விளக்க கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன . டிசம்பர் 29 ஆம் தேதி காலையில் சாத்தூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார் .கிளை செயலர் காதர் அவர்கள் முன்னிலை வகிக்க ,மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் விளக்க உரை நிகழ்த்தினார் .மாலை ராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் தியாகராஜன் தலைமை வகிக்க தோழர் ராதாகிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார் . ஜனவரி 8,9 வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றியும் ,அதை வெற்றி செய்யவேண்டிய நோக்கத்தையும் மாவட்ட செயலர் ரவீந்திரன் விரிவாக பேசினார் . டிசம்பர் 3 முதல் AUAB சார்பாக நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஓத்தி வைத்த காரணங்கள் பற்றி மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி பேசினார் .நடந்து முடிந்த அனைத்திந்திய மாநாடு முடிவுகள் ,அது நடைபெற்ற அம்சங்கள் பற்றி மாவட்ட தலைவர் தோழர் .ஜெயக்குமார் பேசினார் .ஒப்பந்த ஊழியர் சங்க பொறுப்பு மாவட்ட செயலர் தோழர் .வேலுச்சாமி ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகள் பற்றி விரிவாக பேசினார் .மாவட்ட உதவி செயலர் தோழர் வெள்ளை பிள்ளையார் நன்றி நவின்றார் . அதே போல் சிவகாசியில் 31/12/2018 அன்று காலை 10 மணிக்கு நுழை வாயிற் கூட்டமாக நடைபெற்றது .அதற்கு தோழர் ராஜையா ,கிளை தலைவர் தலைமை வகித்தார் .இங்கும் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் மற்றும் மாநில சங்க நிர்வாகி தோழர் சமுத்திரக்கனி பேசினர் .கிளை பொருளாளரும் ,மாவட்ட சங்க நிர்வாகியுமான தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் அன்று மதியம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு ரவிச்சந்திரன் தலைமை வகித்தார் .இங்கு தோழர்கள் வெங்கடசாமி ,ரவீந்திரன் , சமுத்திரக்கனி ஆகியோர் விளக்க உரை நிகழ்த்தினர் .GM அலுவலகத்தில் 01/01/2019 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு தோழர் சிங்காரவேல் தலைமை வகித்தார் . ஆய்படு பொருளை சமர்ப்பித்து கிளை செயலர்கள் தோழர்கள் இளமாறன் மற்றும் மாரிமுத்து பேசினர் .ஜனவரி 8,9 வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றியும் ,அதை வெற்றி செய்யவேண்டிய நோக்கத்தையும் மாவட்ட செயலர் ரவீந்திரன் விரிவாக பேசினார் .நடந்து முடிந்த அனைத்திந்திய மாநாடு முடிவுகள் ,அது நடைபெற்ற அம்சங்கள் பற்றி மாவட்ட தலைவர் தோழர் .ஜெயக்குமார் பேசினார் .மாவட்ட பொருளர் தோழர் பாஸ்கரன் நன்றி நவின்றார் .02/01/2019 அன்று அருப்புக்கோட்டை கிளை கூட்டத்திற்கு தோழர் உதயகுமார் தலைமை தாங்கினார் .இங்கு போராட்டத்தை விளக்கி தோழர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார் ,மதிகண்ணன் ஆகியோர் பேசினர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment