காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
மல்லி செக்யூரிட்டி நிறுவனம் 2 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததை மாநில மட்டத்தில் GM (SR ) அவர்களிடம் நமது உதவி அனைத்திந்திய பொது செயலர் ,மற்றும் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் சுட்டிக்காட்டி பேசியபோது 1 வார கால அவகாசத்தில் விருதுநகர் முதன்மை பொது மேலாளர் தீர்வு காண்பார் என்று கூறி இன்றுடன் 1 வார அவகாசம் முடிந்தது .நிர்வாகத்தோடு கூட பேச மாட்டேன் என்று அந்த நிறுவனம் சர்வாதிகாரமாக நடப்பதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது .2 ஊழியர்களை மீண்டும் பணிக்கு அனுமதித்து உத்தரவு வரும் வரை மாவட்ட செயலர் ரவீந்திரன் 28/01/2019 முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவங்க உள்ளார். இப் போராட்டத்தில் நமது தமிழ் மாநில செயலர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்களும் இணைய உள்ளார் .அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் சரியாக காலை 10 மணிக்கு PGM அலுவலகம் முன் திரளுமாறு தோழமையுடன் மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
No comments:
Post a Comment