2012 டிசம்பர் 4 அன்று நடைபெற்ற மாவட்டச்செயற்குழுவில் அமைப்பு நிலை தொடர்பான விவாதங்களில் அடுத்த மாவட்டச் செயற்குழு விரிவடைந்த மாவட்ட செயற்குழுவாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் 2012 பிப்ரவரி 8ஆம்நாள் நடத்துவதென்றும், சூழலின் அடிப்படையில் அதேநாளில் சேவைமேம்பாட்டுக் கருத்தரங்கம் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டது.
விரிவடைந்த மாவட்டச்செயற்குழுவில் கிளைப்பொறுப்பில் உள்ள அனைவரும் அவசியம் கலந்து கொள்ளவேண்டும் என்பதை அனைத்துக் கிளைச்செயலர்களும் வலியுறுத்தினார்கள். மாவட்டத்தின் பொருளாதார நிலையையையும் வரவிருக்கும் நாட்களின் செலவுகளையும் கருத்தில் கொண்டு இச்செயற்குழுவிற்கு பங்கேற்பாளர் கட்டணமாக ரூபாய் 50 வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இச்செயற்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலச் செயலரையும், மற்றுமொரு மாநில, தேசிய சங்கப் பொறுப்பாளரையும் அழைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment