Tuesday, December 24, 2013

மாறிய சூழ்நிலையில் நடைபெற்ற தேசிய கவுன்சில் கூட்டம் .

புதிய அங்கீகார விதிகளின் படி இரண்டு தொழிற்சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், தேசிய குழுவின் முதல் கூட்டம் 23.12.2013 அன்று நடைபெற்றது.இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டது பிஎஸ்என்எல் வரலாற்றில் முதல் முறையாக இருந்தது. ஊழியர் தரப்பில் இருந்து 9 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மேலும் 5 உறுப்பினர்கள் நியமனத்தை மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை மேற்கோள் காட்டி, நிர்வாகம் ஏற்று கொள்ளாததால் மீதமுள்ள 5 உறுப்பினர்கள் பங்கேற்க முடியவில்லை. கூட்டம்  ஸ்ரீ A.N.ராய் ,இயக்குனர் ( மனித வளம்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது . தோழர் .P அபிமன்யூ, ஊழ்யர் தரப்பு செயலாளர் , தோழர்.இஸ்லாம் அகமது,ஊழியர் தரப்பு தலைவர்  ஆகியோர் ஊழியர் தரப்பை வழி நடத்தினர் விவாதங்கள் மிகவும் பயனுள்ளபடி இருந்தன.பல நியாயமான பிரச்சினைகளை நிறுவனத்தின் சீரழிந்து உள்ள நிதி நிலையை காரணம் காட்டி, நிர்வாக தரப்பு ஏற்றுக்கொள்ள மறுத்தது . பிரச்சனைகளை விவாதித்ததில் மற்றும் எதிர்கொள்வதில் ஊழியர் தரப்பு உறுப்பினர்கள் மத்தியில் ஒட்டு மொத்த ஒற்றுமை இருந்தது.அந்த அணுகுமுறையின் விளைவாக இரண்டு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இடையே பரஸ்பர விவாதத்தை அடுத்து, நிர்வாகத்திடம் ஒற்றுமையாக பிரச்சனைகள் (ITEMS ) சமர்ப்பிக்கப்பட்டன, இதேபோல், 22-12-2013 அன்று நடைபெற்ற முன் (P r e )தேசிய குழு கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்  தரப்பு உறுப்பினர்கள் மத்தியில் ஒன்றுபட்ட புரிதலை உருவாக்கியது.அதனால் இரு சங்கங்களும் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நிர்வாகத்தின் முன்னே ஒரே குரலில் பேச உதவியது. இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் இடையே ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை ஊழியர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் மேலும் அரசாங்கத்தின் தாக்குதல்களில் இருந்து பிஎஸ்என்எல் ஐ பாதுகாக்கவும் பயனாகும் என்று சொல்ல தேவையில்லை .
மாநில  சங்க சுற்றறிக்கை படிக்க :-Click Here


No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...