கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகையாக வரும் டிசம்பர் 18ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை சென்னை பி.எஸ்.என்.எல் நிறுவனம் இலவசமாக சிம்கார்டு வழங்குகிறது.பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு, விழாக்கால சலுகைகளை அறிவித்துள்ளது. வருகிற 18ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை அனைத்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்திலும், விற்பனை மையங்களிலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மேளா நடக்கிறது.தீபாவளிக்கு வழங்கப்பட்ட இலவச 'சிம்கார்டு' சலுகை இப்போதும் தொடர்கிறது. பி.எஸ்.என்.எல். இலவசமாக சிம்கார்டு வழங்குகிறது. ரூ.20 மதிப்புள்ள டாக்டைமிற்கு மட்டும் 20 ரூபாய் செலுத்தி இந்த சலுகையை பெறலாம். தீபாவளி பண்டிகை காலத்தில் இந்த சலுகை அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தகது.மேலும் சினிமா பாடல்கள், ரிங்டோன், காலர்டோன், மொபைல் டி.வி, உள்ளிட்ட வசதிகளை சலுகை கட்டணத்திலும், இலவசமாகவும் வழங்கப்படுகிறது. செல்போன் ரீசார்ஜ் முழு மதிப்பிற்கு அளிக்கப்படுகிறது.இந்த சலுகைகள் அனைத்தும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சென்னை டெலிபோன்ஸ் வாடிக்கையாளர்கள் மட்டுமே பெற முடியும்.
<நன்றி :- சென்னை ஆன்லைன் .காம்>
No comments:
Post a Comment