ஒப்பந்த ஊழியர் சங்க 5 வது மாவட்ட செயற்குழு கூட்டம் 17-07-2014 அன்று மாலை மாவட்ட தலைவர் தோழர் செல்வராஜூ தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது . தோழர் பாண்டியராஜன் கிளை செயலர் அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க ,மாவட்ட செயலர் தோழர் முனியசாமி அவர்கள் மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி பேசினார் . E passbook சாத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதி ஊழியர்களை தவிர மற்ற அனைவர்க்கும் எடுத்தாகி விட்டதை அவர் நினைவு படுத்தினார் .மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தனது உரையில் இன்றைய BSNL நிறுவனம் எதிர்நோக்கி உள்ள நிதி நெருக்கடி, வரன்முறை இன்றி பாதுகாப்பு ,காப்பீடு, ரயில்வே துறைகளில் அந்நிய முதலீட்டை அமல்படுத்தும் இன்றைய மத்திய அரசின் கொள்கைகள் , ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனையில் மாவட்ட சங்கத்தின் செயல்பாடு ஆகியவற்றை விளக்கி கூறினார் .ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தோழர் M முருகையா அவர்கள் தன் சிறப்புரையில் மாநில மட்டத்தில் ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளை கையாளும் தன்மை குறித்தும் , நீதிமன்றங்களில் நாம் கொண்டு சென்று உள்ள பிரச்சனைகளையும் , தற்போது ஏற்பட்டுள்ள வீக்லி ஆப் சம்பள பிரச்சனை , semi skilled சம்பள வாங்குவதற்கான முயற்சி பற்றியும் விரிவாக விளக்கினார் .ஒப்பந்த ஊழியர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தையும் அவர் கூறினார் . தோழர் பாண்டியராஜன் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது . இன்றைய கூட்டத்தில் மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் .முத்துசாமி ,சந்திரசேகரன் ,மாவட்ட பொருளாளர் தோழர் வெங்கடப்பன் , கிளை செயலர்கள் தோழர்கள் முத்துராமலிங்கம் ,சோலை ,சிங்காரவேலு , தோழர் மாரியப்பா , மாரிமுத்து ஆகியோர் உட்பட சுமார் 60 தோழர்கள் கலந்து கொண்டனர் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment