Monday, January 4, 2016

திருமணமாகி 45 நாட்கள்தான்... பதன்கோட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருசேவக்சிங்

Just 45 Days After Marriage, Gursewak Singh Martyred in Pathankot Attack

அம்பாலா: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஞ்சாப் மாநிலம் பதன் கோட்டில் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களில் ஹரியானாவின் அம்பாலாவைச் சேர்ந்த இளம் வீரர் குருசேவக்சிங்கும் ஒருவர்.. திருமணமாகி 45 நாட்களிலேயே தாய்நாட்டுக்காக தன் உயிரை அர்ப்பணித்த அந்த மாவீரனை பெற்றதற்காக பெருமிதம் கொள்கிறோம் என நெகிழ்கின்றனர் குருசேவக்சிங்கின் பெற்றோர்... ஹரியானா மாநிலம் அம்பாலா அருகே உள்ளது ஹர்நாலா கிராமம். இது பஞ்சாப் மாநில எல்லையையொட்டியது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி சுசாசிங் தன் 2 மகன்களையும் நாட்டுக்காக ராணுவத்துக்கு அர்ப்பணித்துவிட்டார். சுசாசிங்கின் இளைய மகன் குருசேவக்சிங்தான் பதன்கோட் விமான படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்.இளம்வயதில் இருந்தே அறிவுக்கூர்மை படைத்த குருசேவக் சிங், விமானப் படையில் சேருவதற்கான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர். குருசேவக்சிங் தமது வழிகாட்டியாக மாவீரன் பகத்சிங்கை ஏற்றுக் கொண்டவர். பெங்களூருவில் பொறியியல் படிப்பை முடித்து கடந்த 6 ஆண்டுகளாக விமானப் படையில் கருடா கமாண்டோ பிரிவில் கார்ப்போரல் தரத்தில் சேவையாற்றி வந்தார் குருசேவக் சிங். அவருக்கு 45 நாட்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. தன் மகனின் வீரமரணம் குறித்து கூறிய சுசாசிங், என்னுடைய மகன் இந்த நாட்டுக்கக உயிரைத் தியாகம் செய்திருக்கிறான்.. இதற்காக நான் பெருமிதப்படுகிறேன். இது அவனுடைய கடமை. இவ் வீரனுக்கு விருதுநகர் மாவட்ட பி எஸ் என் எல் ஊழியர் சங்கம் தன் அஞ்சலியை செலுத்துகிறது .
             நன்றி :- ஒன்  இந்தியா நியூஸ் 




No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...