Thursday, October 12, 2017

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர்

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர் மாவட்ட கூட்டம் 9 ஆம் தேதி NFTE அலுவலகத்தில் அதன் மாவட்ட செயலர் தோழர்  ராமசேகர் தலைமையில் நடைபெற்றது .இக் கூட்டத்தில் BSNLEU சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,மாவட்ட அமைப்பு செயலர் தோழர் மாரியப்பா ஆகியோரும் சேவா BSNL சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி சகோதரர் பிரேம்குமார் மற்றும் தோழர் ராமநாதன் அவர்களும் ,SNEA சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் செந்தில்குமார் அவர்களும் ,AIBSNLEA சார்பாக அதன் மாவட்ட தலைவர் தோழர் நாராயணன் மற்றும் அதன் மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ஆகியோரும் ,AIGETOA  சங்கம் சார்பாக அதன் மாநில சங்க நிர்வாகி தோழர் விக்டர் சாம்சன் அவர்களும் ,TEPU சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் சரவணன் ஆகியோரும் பங்கேற்றனர் .வர இருக்க கூடிய போராட்டங்களை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்க முடிவு செய்யப்பட்டது .ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,விருதுநகர் மாவட்ட அமைப்புக்கு தோழர் ராம்  சேகர் தலைவராகவும் ,தோழர் ரவீந்திரன் கன்வீ னராகவும்  ,தோழர் செந்திகுமார் அவர்கள் பொருளாளராகவும் இருக்க முடிவு செய்யப்பட்டது .இணை கன்வீனர்களாக தோழர்கள் பிரேம்குமார் மற்றும் பிச்சைக்கனி ஆகியோர் செயல்படுவார்கள் .இணை தலைவர்களாக தோழர்கள் நாராயணன் மற்றும் விக்டர் சாம்சன் ஆகியோர் செயல்படுவர் .துணை .பொருளாராக தோழர் சரவணன் செயல்படுவார் .போராட்ட நிதியாக BSNLEU சார்பாக 1200 ,NFTE,AIBSNLEA,SEWA BSNL, AIGETOA சங்கங்கள் சார்பாக தலா 1000 ரூபாய் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது .TEPU சார்பாக ரூபாய் 200 கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது .
1)16/10/2017 அன்று மாவட்டம் முழுவதும் ஊழியர்களை திரட்டி GM அலுவலகம் முன்பாக காலை 1030 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது .
2) மக்களவை உறுப்பினரை சந்திக்க ஏற்பாடு செய்ய AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி முயற்சி செய்வது 
3) 16/11/2017 அன்று மனித சங்கிலி இயக்கத்தை மதுரை ரோட்டில் நடத்துவது ,அதற்குரிய போலீஸ் பெர்மிசன் பெறுவது 
4) டிசம்பர் மாதம்  நடைபெற உள்ள 2 நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க மாவட்டம் முழுவதும் இணைந்து சுற்றுப்பயணம் செய்வது .என்று முடிவுகள் எடுக்கப்பட்டன .

Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting and indoor
Image may contain: 3 people, people sitting, table and indoor
Image may contain: 1 person, sitting and indoor

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...