ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் 14 வது மாநாடு 08/09/2017 அன்று அதன் தலைவர் தோழர் வெங்கடசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர் ரவிச்சந்திரன் அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க அனைவரும் ஒரு நிமிடம் தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர் .அதன் பின் கிளை செயலர் தோழர் சமுத்திரம் வரவேற்புரை நிகழ்த்தினார் .அதன் பின் முறையாக கிளை மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார் .ஒற்றுமை மற்றும் தொடர் போராட்டங்களின் மூலமே ஊதியமாற்ற இலக்கை நாம் அடையமுடியும் என்றும் ,தற்போதைய மத்திய அரசு ஒட்டு மொத்த அரசு துறை நிறுவனங்களையும் அழிப்பதற்கான முயற்சிகளை எதிர்த்து அனைத்து பொது துறை நிறுவனங்களில் உள்ள தொழிற்சங்கங்ளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு உள்ள
தேசிய மேடையின் அறைகூவலான நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை நியூ டெல்லியில் நடைபெற உள்ள தர்ணா போராட்டத்தில் நமது மாவட்டம் சார்பாக பங்கேற்க வேண்டிய அவசியத்தை சுட்டி காட்டினார் .மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி செயல் இழந்த மாநில அரசு ,நீட் தேர்வு பிரச்னை ,ஜியோ வின் தாக்கம் பற்றி விரிவாக சிறப்புரை நிகழ்த்தினார் .மாநாட்டை வாழ்த்தி SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் ,நமது மாவட்ட உதவி செயலர்கள் தோழர் முத்துச்சாமி , தோழர் வெள்ளை பிள்ளையார் ,தோழர் தங்கதுரை TNTCWU சங்க மாநில சங்க நிர்வாகி தோழர் வேலுச்சாமி , விருதுநகர் கிளை செயலர் தோழர் மாரிமுத்து மற்றும் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் மாரியப்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .புதிய நிர்வாகிகளாக தோழர்கள் ரவிச்சந்திரன் ,தங்கதுரை ,வெங்கடசாமி ஆகியோர் முறையே தலைவர் ,செயலர் பொருளாளர் ஆக தேர்நதெடுக்கப்பட்டனர்
No comments:
Post a Comment