வங்கிக் கடன்களை வாங்கி ஏமாற்றியவர்கள் குறித்து இந்தியா ஸ்பெண்ட் இணைய தளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியோர் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில் 9 மடங்காக அதிகரித்திருக்கிறது. அதாவது இந்த தொகையானது மத்திய அரசு வேளாண்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ35,894 கோடியைவிட 1.5 மடங்கு அதிகமாகும். மொத்தம் ரூ 56,521 கோடி வங்கிகளின் வாரா கடனாக உள்ளது.வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தாததில் மும்பையை சேர்ந்த வின்சம் டைமண்ட்ஸ் அண்ட் ஜூவல்லரி நிறுவனம், போர்எவர் பிரீசியஸ் ஜூவல்லரி & டைமண்ட்ஸ் நிறுவனங்கள் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த 2 நிறுவனங்களும் இணைந்து மொத்தம் ரூ3,263 கோடி கடனை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு அடுத்ததாக மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பர் ஜூம் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் ரூ 1,647 கோடி; விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ1,200 கோடி, மும்பையின் பீடா நாப்தால் நிறுவனம் ரூ951 கோடி,த்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த ராஜா டெக்ஸ்டைல்ஸ் ரூ694 கோடி வங்கிக் கடன்கள் பாக்கி வைத்துள்ளன.
நன்றி :- ஒன் இந்தியா செய்திகள்
No comments:
Post a Comment