Sunday, March 9, 2014

கீழவெண்மணி நினைவாலயம்

              
                   கீழவெண்மணி, நாகை: கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக உயிரோடு 44 விவசாய கூலித் தொழிலாளர்கள் உயிரோடு தீவைத்துக் கொளுத்தப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்த நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில், பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டுள்ள நினைவாலயத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று திறந்து வைத்தார். கீழவெண்மணி கிராமத்தில் 1968-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாய தொழிலாளர்கள் 44 பேர் கூரை வீட்டில் வைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந்தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.44 தியாகிகளின் நினைவாக 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கீழ வெண்மணி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவாலயத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பிரகாஷ்கரத் கலந்து கொண்டு தியாகிகள் நினைவாலயத்தை திறந்து வைத்தார். இதில் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், டி.கே.ரெங்கராஜன் எம்.பி., பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சி.ஐ.டி.யூ. அகில இந்திய தலைவர் பத்மநாபன், அகில இந்திய மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாகக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமையில் ஒரே இடத்தில் 44 தியாகிகளை நினைவு கூறும் வகையில் 44 செங்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...