பி எஸ் என் எல் ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட 7வது மாநாடு இன்று (05-03-2014) கோலாகலமாக தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் தொடங்கியது. தேசிய கொடியை தோழர் பரமேஸ்வரன் தேசபக்த கோஷங்கள் முழங்க தேசிய கொடி ஏற்றி வைத்தார். நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க கொடியை அருப்புகோட்டை கிளையின் மூத்த தோழர் கிருஷ்ணசாமி சிவகாசி அதிர் வேட்டுகள் முழங்க ஏற்றி வைத்தார். தோழர் இளமாறன் கோஷங்கள் எழுப்ப அருப்புகோட்டை நகரே அதிர்ந்தது.
"மாறும் என்ற விதியைத் தவிர அனைத்தும் மாறும்" என்ற காரல் மார்க்சின் கொள்கையை பொய்யாக்கும் நோக்கத்துடன் செயல்படும் NFTE சங்கத்தினர் வழக்கம் போல் மாநாடு எங்கள் பணிகளை பாதிக்கிறது என்று மாநில நிர்வாகத்திற்கு fax அனுப்பி தாங்கள் தொழிற் சங்க பண்பாளர்கள் இல்லை என்பதை மீண்டும் நிருபித்து உள்ளனர். முற்போக்கு வேடம் கொண்ட இந்த கபடதாரிகள் முகம் கிழிக்கும் வண்ணம் நமது மாநாடு சீரும் சிறப்புமாய் வெற்றிகரமாய் நடந்து கொண்டு உள்ளது.
தோழர் ஜெயக்குமார் வரவேற்புரை நிகழ்த்த, அஞ்சலி தீர்மானத்தை தோழர் ராஜ்மோகன் வாசிக்க, மகாநாட்டை மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக தொடக்கிவைத்து ராஜ்காட் மத்திய செயற்குழு முடிவுகளை அமலாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மாநில செயலர் தோழர் செல்லப்பா அவர்கள் சிறப்புரையில் நமது சங்கம் செய்துள்ள சாதனைகளையும், குறிப்பாக 78.2 சதவீத IDA இணைப்பை பெற்று தந்ததில் நமது சங்கத்தின் பங்களிப்பை விரிவாக கூறினார்.
நமது மாநில துணை செயலர் தோழர் முருகையா வர உள்ள நாடளுமன்ற தேர்தலில் நமது பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் எனவும்,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளின் தன்மையை பற்றியும் விரிவாக பேசினார். மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை ஒரு சில திருத்தங்களுடன் ஏற்கப்பட்டது. நமது ஆண்டறிகையை மாநில செயலர் பாராட்டியது நமக்கு பெருமை அளிக்கிறது. மாவட்ட பொருளாளர் தோழர் வெங்கடப்பன் சமர்ப்பித்த நிதி நிலை அறிக்கையும் மகாநாட்டில் ஏற்று கொள்ளபட்டது.
சார்பாளர் அமர்வில் 8 கிளைகளில் இருந்தும் தலா இருவர் பேசினர்.தோழர்கள் இளமாறன்,கிருஷ்ணகுமார், வெங்கடேஷ்,முத்துராமலிங்கம், ராஜு, கருப்பசாமி, ஜெயபாண்டி, கணேஷ்போஸ், காதர் மொய்தீன்,ஜெயச்சந்திரன், அஷ்ரப்தீன், ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டனர். நமது மாநில செயலர் தோழர் செல்லப்பா தொகுப்புரை வழங்கினார்கள்.
வாழ்த்துரையாக தோழர்கள் அய்யாசாமி, பெருமாள்சாமி, SNEA திரு செல்வராஜ், முனியசாமி, CITU சங்க தோழர் தாமஸ், JCTU சார்பாக தோழர் M.ராஜாராம், சாலியர் மகாஜன சங்க தலைவர் திரு சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். வாழ்த்திப் பேசிய திரு ராதாகிருஷ்ணன், மூத்த கணக்கு அதிகாரி அவர்கள் பேசியபோது அவர் முதல் முதலாக AITEU-CL I I I (N ) சங்கத்தின் மாவட்ட செயலராக பணி செய்ததை மலரும் நினைவுகளாக நினைவு கூர்ந்தார். நான் என்றும் எப்போதும் உங்கள் பக்கமே என ஆணித்தரமாக் எடுத்துரைத்தார். அன்றைய அருப்புகோட்டை கோட்ட அதிகாரியும் தற்போது துணை பொது மேலாளர் ஆக பணி புரியும் திரு ராஜகோபால் வாழ்த்துரை வழங்கினார்.
முதல் நாள் நிகழ்சிகள் மாலை முடிவடைந்த பின் ஒப்பந்த ஊழியர்களின் கலந்துரையாடல் தோழர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் முருகையா, மாநில செயலர் தோழர் செல்லப்பா, மாவட்ட செயலர் தோழர் முனியசாமி மாநில உதவி செயலர் தோழர் பழனிசாமி ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர். மாநாட்டு நிகழ்வுகளை தோழர்கள் கண்ணன், ராஜ்மோகன் மற்றும் அஸ்ரப்தீன் ஆகியோர் புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்தனர். ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து பணி செய்த அருப்புகோட்டை தோழர்கள் உதயகுமார், ஜெயக்குமார்,A.கண்ணன், அஷ்ரப்தீன், ராஜ்மோகன், சோலை, கிருஷ்ணசாமி, கணேசன், முனியசாமி, தியாகராஜன், சந்திரசேகரன், பம்பரமாய் பணி செய்த ஒப்பந்த ஊழியர் சங்க தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கும், மகாநாட்டில் பெரும் திரளாக பங்கேற்ற சார்பாளர்கள், பார்வையாளர்கள் அனைவர்க்கும், மாவட்ட சங்க மற்றும் கிளை சங்க நிர்வாகிகளுக்கும் மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.
06-03-2014 அன்று நடைபெற உள்ள இரண்டாம் நிகழ்வை பெரும் வெற்றியாக்க அனைவரும் சூளுரைத்து சென்றது ஒரு சிறப்பு மிக்க பதிவாக மாநாட்டில் பதிவானது.

No comments:
Post a Comment