2 ஆம் நாள் மாநாட்டு நிகழ்ச்சியான பொது அரங்கம் காலை சரியாக 11 மணிக்கு மாவட்டதலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக தொடங்கியது. அனைவரையும் வரவேற்று வரவேற்பு குழு செயலர் தோழர் U.B.உதயகுமார் வரவேற்ப்பு உரை நிகழ்த்தினார். அடுத்துப் பேசிய அருப்புகோட்டை வர்த்தக சங்க தலைவரும், வரவேற்பு குழு தலைவருமான பாபு என்ற சங்கரநாராயணன் அவர்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து கோடிகணக்கான வியாபாரிகள் வாழ்வில் விளையாடும் மத்திய அரசின் போக்கை சுட்டி காட்டினார். இரண்டாம் நாள் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய மாவட்ட செயலர் நமது நிறுவனத்தை காப்பதற்கு தொழிற்சங்க தளத்தில் போராடுவது மட்டும் இன்றி அரசியல் தளத்தில் நாம் செய்ய வேண்டிய ஜனநாயக கடைமைகளை நினைவூட்டினார்.
சிறப்புரை ஆற்றிய மாநில செயலர் தோழர் செல்லப்பா அவர்கள் ராஜ்காட் மத்திய செயற்குழுவின் அடிப்படையில் ஊழியர்களை குடும்ப உறுப்பினர்களோடு பங்கேற்க செய்து, வர உள்ள தேர்தலில் நாம் செய்ய வேண்டிய ஜனநாயக கடமையை சுட்டி காட்ட வேண்டிய அவசியத்தை நமது மாவட்ட சங்கம் நிறைவேற்றி உள்ளதை பாராட்டினார். மத நல்லிணக்கம் பேண வேண்டிய அவசியத்தையும் அவர் சுட்டி காட்டினார். தமுஎகச’வின் தலைவர் தோழர் தமிழ்செல்வன் பேசும்போது தமிழ் மணம் கமழும் நடையோடு மனிதனின் பல்வேறு பரிமாணங்களை, பண்பாட்டின் அவசியத்தை, விளம்பரம் மூலமாக தங்கள் பொருட்களை நுகர்வோர் தலையில் கட்டும் ஏமாற்று வித்தையை மிக அழகாக சுட்டி காட்டினார் .தோழியர் சுகந்தி பேசும் போது தற்போது பெண்கள் மீது நடக்கும் பாலியல் தாக்குதல்களை விரிவாக சுட்டி காட்டினார்.
மதியம் 3 மணி அளவில் "SAVE BSNL" கருத்தரங்கம் நமது மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக தொடங்கியது. நமது மாநில உதவி செயலர் தோழர் பழனிசாமி அவர்கள் கருத்தரங்கை தொடக்கி வைக்க, தோழர்கள் A.கண்ணன் மற்றம் வெங்கடேஷ் அவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். அதன் பின் துணை பொது மேலாளர்கள் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் திரு. சுந்தரராஜ் ஆகியோர் நிர்வாக தரப்பில் தங்கள் கருத்துக்களை கூறினர். பொது மேலாளர் திருமதி S.E. ராஜம் அவர்கள் வியாபாரத்தை பெருக்க வேண்டிய அவசியத்தை, குடும்ப உறுப்பினர்கள் DSA ஆக வேண்டிய கட்டாயத்தை கூறினார். தோழர் சமுத்திரகனி அவர்கள் பேசும் போது பொது மேலாளர் அவசியம் விருதுநகர் வந்து பிரச்சனைகள் தீர்விற்கு வழி காண வேண்டும் என வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து மாநில செயலர் தொகுப்புரை வழங்கினார். சொசைட்டி தேர்தலில் நமது வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசியத்தை மாநில செயலர் விரிவாக எடுத்துரைத்தார். அதன் பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கபட்டனர். தோழர் முத்துசாமி நன்றிகூற மாநாடு இனிதே முடிவுற்றது. இன்றைய மாநாட்டில் 200 க்கும் மேற்பட்ட ஊழியர்களும் 60க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும், 100க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்.
மாநாடு வெற்றிபெற உழைத்த அனைத்துத் தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்டம் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது.

Congratulations for conducting the conference a very successful one
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி தோழர்
ReplyDelete