எழுச்சிகரமாக மற்றும் உற்சாகமாக நடைபெற்ற இணைந்த மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தின் AUAB சங்கங்களின் இணைந்த மாவட்ட விரிவடைந்த செயற்குழு இன்று காலை 10 மணிக்கு தோழர்கள் ஜெயக்குமார் (BSNLEU ), பிச்சைக்கனி (AIBSNLEA) மற்றும் செந்தில்குமார் (SNEA) கூட்டு தலைமையின் கீழ் மிக சிறப்பாக நடைபெற்றது .இக் கூட்டத்தை BSNLEU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் முறையாக துவக்கிவைத்து உரையாற்றினார் .சிறப்புரையாக நமது BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் ,SNEA மாநில சங்க நிர்வாகி தோழர் கோவிந்தராஜன் ,AIGETOA மாநில சங்க நிர்வாகி தோழர் விக்டர் சாம்சன் மற்றும் BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் சமுத்திரக்கனி ஆகியோர் உரை ஆற்றினர் .வர இருக்கின்ற 3 நாள் வேலை நிறுத்தத்தை 100% வெற்றியை தரவேண்டும் என்று பேசிய அனைவரும் வலியுறுத்தினர் . SNEA மாவட்ட பொருளாளர் தோழர் செல்வராஜ் நன்றி நவின்றார் . மாவட்டம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும் .கலந்து கொண்ட அனைவருக்கும் GM அலுவலக கிளை செயலர் இளமாறன் அவர்கள் தனது சொந்த செலவில் தேநீர் மற்றும் ஸ்னாக்ஸ் வழங்கி உபசரித்தார் .
No comments:
Post a Comment