மக்கள் சேவையில் BSNLEU
உருக்குலைந்த சென்னைக்கு உதவி செய்ய நமது தமிழ் மாநில சங்கம் கொடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 09-12-2015 அன்று மாவட்டம் முழுவதும் ஒரு நாள் வசூல் செய்யப்பட்டது .முதல் தவணையாக 09-12-2015 அன்று ரூபாய் 12,150/- மாநில சங்கத்திடம் வழங்கப்பட்டது .10-12-2015 அன்று ரூபாய் 6600/-ஐ மாவட்ட சங்கம் மாநில சங்கத்திடம் வழங்கி விட்டது . ஆக மொத்தம் 18,750/- நமது விருதுநகர் மாவட்ட சங்கத்தால் வழங்க பட்டு உள்ளது .சங்க பேதம் பார்க்காது வழங்கிய அனைத்து ஊழியர்கள் ,அதிகாரிகள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி .
No comments:
Post a Comment