நமது மாவட்ட சங்க புதிய நிர்வாகிகளுடன் 05/07/2016 அன்று மாவட்ட பொது மேலாளர் அவர்களுடன் பேட்டி கண்டோம்.7 வது சரிபார்ப்பு தேர்தலுக்கு பின் நடைபெற்ற முதல் பேட்டியில் நமது புதிய மாவட்ட சங்க நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கீழ் கண்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டன.
1.மாவட்டங்களில் பல்வேறு BTS களில் பாட்டரி பழுது .இதனால் நமது மொபைல் சேவை பாதிப்பை சுட்டி காட்டி உள்ளோம்
2.பவர் பிளான்ட் பிரச்சனை உள்ள தொலைபேசி நிலையங்கள் எவை என பட்டியல் இட்டு கூறியுள்ளோம்.
3.ரிங் failure பிரச்சனை நெடு நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ளதை சுட்டி காட்டி உள்ளோம்.
4.விருதுநகர் outdoor பகுதியில் கடும் ஊழியர் பற்றாக்குறை உள்ளதை சுட்டி காட்டியுள்ளோம் .இதை விரைந்து செய்யவில்லை எனில் பழுதுகளை களைவதில் கடும் காலதாமதம் ஏற்படும் என் கூறியுள்ளோம்.
5.நமது கேபிள்களை பாதுகாக்க தனி ஒரு டீம் உருவாக்கப்படவேண்டும்.
6.எழுத்தர் கேடரில் ஏற்பட்டு உள்ள ஊழியர் பற்றாக்குறையை சரி செய்ய ( குறிப்பாக CSC,ஸ்ரீவில்லிபுத்தூர் ,சிவகாசி ,சாத்தூர், விருதுநகர்)ஆஃபீஸ் கீப்பிங் டெண்டர் விட வலியுறுத்தி உள்ளோம்.
7.தவறுதலாக பிடிக்கப்பட்ட தொழில் வரியை சம்பந்தபட்ட ஊழியர்களுக்கு ரீபண்ட் செய்ய வேண்டும்.
8.RR நகரில் தொலை பேசி நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்ட போது பணி செய்த ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தொகை வழங்காமல் இருப்பது சுட்டி காட்டப்பட்டது .
9.மாறுதல் கொள்கையின் படி இடைக்காலங்களில் ஊர் விட்டு ஊர் மாறுதல் செய்வதை நமது சங்கம் அனுமதிக்காது என்பதை தெளிவாக கூறிவிட்டோம் .
10.ஊழியர்களின் personal claims தீர்வில் பெரும் சுணக்கம் இருப்பது சரி செய்யப்பட வேண்டும்.
11.கடந்த மாதம் 21,22 தேதிகளில் நடைபெற்ற ரோடு ஷோ களில் நமது சங்க மாவட்ட சங்க நிர்வாகிகள் முழுமையாக கலந்து கொண்டதை சுட்டி காட்டி அந்த 2 நாட்களில் இலக்கை தாண்டி சிம் சேல்ஸ் செய்தது சிறப்பு மிக்கது என கூறினோம்.
12.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தேவையற்ற நிகழ்வுகள் நடைபெறுவதை நிர்வாகம் விழிப்புணர்வோடு கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
13.மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நமது BSNLEU சங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என் உறுதி அளித்துள்ளோம்.
14.அனைத்து கேடர்களுக்கும் tenure மாறுதலை விரைந்து முடிக்க வேண்டும் என் வலியுறுத்தி உள்ளோம்.
15.கேபிள் பழுது நீக்க Cable fault route locator உடனடியாக வாங்க வேண்டும்.
15.கேபிள் பழுது நீக்க Cable fault route locator உடனடியாக வாங்க வேண்டும்.
மாவட்ட செயலருடன் , மாவட்ட தலைவர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர்கள் வெங்கடப்பன், தங்கதுரை, இளம் தோழர் அஷ்ரப் தீன் மற்றும் கணேசமூர்த்தி ,மாவட்ட பொருளர் சந்திரசேகரன், மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழியர் மங்கையற்கரசி,அனவ்ரதம்,I முருகன் ,ராஜு, கிளை செயலர்கள் முத்துசாமி, கருப்பசாமி, மாரிமுத்து,முத்துராமலிங்கம் ஆகியோர் பேட்டியில் பங்கேற்றனர் .
No comments:
Post a Comment