Monday, July 25, 2016

மேளா

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 22,23 தேதிகளில் நடத்தப்பட்ட மேளாவில் நமது BSNLEU சங்க மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், நமது உறுப்பினர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர். நமது மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ஏழாயிரம்பண்ணை மற்றும் நென்மேனி பகுதியில் பங்கேற்றார். GM அலுவலக கிளை செயலர் தோழர் இளமாறன், மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன்  பாலவநத்தம் பகுதியில் பங்கேற்றனர்.   பாலவநத்தம் பகுதியில் வசிக்கும் நமது பணி ஒய்வு பெற்ற  தோழர் V சுப்ரமணியன் அவர்களும் மேளாவில் பங்கேற்றதுடன் நமது ஊழியர்களுக்கு உணவு அளித்து விருந்தோம்பல் செய்தது சிறப்புமிக்கதுRR நகரில் தனி ஒருவனாக 100 சிம்களை நமது BSNLEU தோழர் ராஜேந்திரன் விற்பனை செய்துள்ளார். அவருக்கு நமது சிறப்பு பாராட்டுக்கள். அதே போல் சிவகாசியில் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேளாவில் தோழர்கள் ராஜமாணிக்கம்,அழகுராஜா,ராஜு, தர்மராஜ, வைரவசாமி, மகாலிங்கம், சுப்ரமணியன், முருகன், M.கருப்பசாமி, முனியாண்டி, காரிசேரி கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர். குரூப்ஸ் பகுதியில் முத்துசாமி, ராஜாராம் மனோகரன்,தங்கமாரி ,ராஜய்யா ஆகியோர்  பங்கேற்றனர் .சிவகாசி பகுதியில் 831 சிம்களை விற்று சாதனை புரிந்த தோழர்களுக்கு நமது சிறப்பு பாராட்டுக்கள் .ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நமது தோழர்கள் சமுத்திரம் ,சுந்தரமஹாலிங்கம் ,தங்கதுரை ,வெங்கடசாமி ஆகியோர் பங்கேற்றனர் .ராஜபாளையம் பகுதியில் நமது கிளை செயலர் முத்துராமலிங்கம் மம்சாபுரம் மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளில் பங்கேற்றார். ராஜை பகுதியில் நமது தோழர்கள் ராதாகிருஷ்ணன், I.முருகன், பொன்னுச்சாமி, தியாகராஜன், ராமசந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மற்றும் நமது தோழர்கள் சாத்தூர் கிளை செயலர் கலையரசன் N.சுப்பையாபுரத்திலும் ,அண்ணாசாமி நென்மேனியிலும்,SNATTA தோழர் சரவணகுமார் ,TTA சாத்தூரிலும்    நமது சேல்ஸ் டீம் பகுதி ஊழியர்கள் தங்கராஜ் ஏழாயிரம்பண்ணை மற்றும் நென்மேனியிலும்  நாகேந்திரன் சிவகாசியிலும்  பங்கேற்றனர். அருப்புக்கோட்டை பகுதியில் தோழர் மதிக்கண்ணன், அஷ்ரஃப்தீன், கணேசன், சோலை, தினகரன், உதயகுமார், கணேசமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.  ஒட்டு மொத்தமாக இரண்டு நாட்களும் மொத்தம் 2545 சிம்கள் விற்கப்பட்டு உள்ளது. 01-07-2016 முதல் 18-07-2016 வரை நமது மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட சிம்களின் எண்ணிக்கை 2076 மட்டுமே ,ஆனால் நமது சங்க உறுப்பினர்கள் பங்கேற்பில் 2 நாட்களில் 18 நாட்கள் விற்பனையை முறியடித்தது மிகப்  பெரிய சாதனை .மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்.  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...