8 வது மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்திய சிவகாசி கிளைகளுக்கு பாராட்டு விழா கூட்டம் சிவகாசியில் 13/07/2016 அன்று தோழர்கள் ராஜாராம் மனோகரன் ,ராஜையா .செல்லம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கிளை செயலர்கள் தோழர்கள் முத்துசாமி மற்றும் கருப்பசாமி அவர்கள் ஆய்படு பொருளை சமர்ப்பித்து உரையாற்றினர். மாநாட்டு பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைவரும் கவுரவிக்கப்பட்டனர் .மாநாட்டை நடத்திய செலவு மட்டும் அல்லாது அனைத்திந்திய மாநாட்டு நன்கொடையாக ரூபாய் 90,000 வழங்கிய அற்புதமான சிவகாசி கிளைகளின் செயல்பாடு அனைவராலும் பாராட்டப்பட்டது .மாவட்டத்தின் அனைத்து இயக்கங்கள் ,நன்கொடைகள் ,மார்க்கெட்டிங் பணிகள் அனைத்திலும் நம்பர் 1 கிளைகளாக திகழும் சிவகாசி கிளையை பாராட்டி மாவட்ட செயலர் பேசினார் .வர உள்ள செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்திலும் சிவகாசி கிளை முத்திரை பதிக்கும் என கூறினார் .அகில இந்திய மாநாட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 60% கொடுத்த முதல் மாவட்டம் நமது மாவட்டம் என்பதில் பெருமை கொள்ள செய்வதில் சிவகாசி கிளைகளின் பங்கு பாராட்ட தக்கது என பாராட்டினார் . மாநாட்டு வரவேற்பு குழுவின் செயல்பாட்டை பாராட்டி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ,மாவட்ட உதவி செயலர் தோழர் R .ஜெயக்குமார் ,மாவட்ட சங்க நிர்வாகிகள் ராஜமாணிக்கம் ,முனியாண்டி ,ராஜு ,ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர் .தோழர் கணேசன் நன்றியுரை கூறி கூட்டத்தை இனிதே நிறைவு செய்தார் .மாவட்ட சங்கத்திற்கு இரு கிளைகளும் தங்கள் பங்களிப்பாக தலா 5000/வீதம் ரூபாய் 10,000/- வழங்கினர் .மாவட்ட சங்கம் தன் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது .மாநாட்டு பணிகளில் தனது முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கு நமது சிறப்பு பாராட்டுக்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment