Saturday, July 30, 2016

நிகழ்வுகள்

செப்டம்பர் 2 அனைத்திந்திய வேலைநிறுத்த போராட்டம் மற்றும் சென்னையில் நடைபெற உள்ள அனைத்திந்திய மாநாட்டு நிதி திரட்டுவது விஷயமாக 27/07/2016 அன்று சாத்தூரில் ,29/07/2016 அன்று அருப்புக்கோட்டையில் கிளை பொது குழு கூட்டங்கள் நடைபெற்றன .சாத்தூரில் கிளை தலைவர் வெங்கடாசலபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கிளை செயலர் தோழர் கலையரசன் விவாத பொருளை விளக்கி கூறினார் .கிளையின் அத்துணை உறுப்பினர்களும்  உற்சாகமாக நன்கொடை தொகையை கூறி , வரும் வேலை நிறுத்ததையும் வெற்றிகரமாக்க உறுதி பூண்டனர் .இக் கூட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகி தோழர் காதர் ,முன்னாள் மாவட்ட சங்க நிர்வாகி ஜெயச்சந்திரன் ,விருதுநகர் SDOP கிளை செயலர் தோழர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர் .தோழர் ஷண்முகவேலு தனது பங்களிப்பாக ரூபாய் 5000/- தருவதாகவும் தோழியர் தனலட்சுமி அவர்கள் ரூபாய் 2000/- தருவதாக கூறியது நமது இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்கும் .
 
29/07/2016 அன்று அருப்புக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் ஜெயக்குமார் , அஷ்ரப் தீன் ,மாவட்ட சங்க நிர்வாகி தோழர் கணேசமூர்த்தி , TNTCWU சங்க மாவட்ட உதவி தலைவர் தோழர் முனியசாமி , கிளை செயலர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்  கிளை தலைவர் தோழர் உதயகுமார் தலைமை வகிக்க ,கிளை செயலர் தோழர் A .கண்ணன் ஆய்படு பொருளை சமர்ப்பித்து பேசினார் .ஸ்தல மட்ட பிரச்சனைகள் ,செப்டம்பர் 2 வேலை நிறுத்தம் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன. தோழர் சோலை நன்றியுரை கூறி  கூட்டத்தை நிறைவு செய்தார் .
 
28/07/2016 அன்று TNTCWU சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர்  இளமாறன் தலைமையில் நடைபெற்றது .மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் சமர்ப்பித்த ஆய்படுபொருள் மீது விவாதம் நடைபெற்றது .சமபள பட்டுவாடா ,போனஸ் ,சம்பள நிலுவை ,EPF ,ESI ஆகிய பிரச்சனைகள் மீது ஒரு நல்ல விவாதம் நடைபெற்றது .மாநில செயலர் தோழர் வினோத்குமார்  , அனைத்திந்திய சங்க நிர்வாகி தோழர் பழனிச்சாமி மாநில சங்க நிர்வாகி வேலுச்சாமி ஆகியோர் விரிவாக ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் பற்றி பேசினர் .

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...