மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு மற்றும் மக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கள் இணைந்து முடிவெடுத்துள்ளன. டெல்லியில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களான பி.எம்.எஸ், ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, ஹெச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ, டி.யூ.சி.சி., சேவா, எல்.பி.எஃப், யூ.டி.யூ.சி ஆகிய தொழிற்சங்கங்களும் இணைந்து தேசிய கருத்தரங்கை நடத்தியது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதைக் கண்டித்தும் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்து தொழிற்சங்கங்களும் கொடுத்துள்ள 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. மேலும் மத்திய அரசைக் கண்டித்து செப்டம்பர் மாதம் மாதம் நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படுகிறது.
நன்றி :- ஒன் இந்தியா
No comments:
Post a Comment