30-05-2015 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை மகாநாடும் தோழர் ஆறுமுகம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் கிளை தலைவர் தோழர் .L தங்கதுரை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . தோழர் கந்தசாமி அவர்கள் அஞ்சலி தீர்மானம் வாசிக்க , கிளை செயலர் தோழர் .சமுத்திரம் வரவேற்புரை நிகழ்த்தினார் . அதன் பின் முறையாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் கிளை மகாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றினார் . நடந்து முடிந்த 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் வெற்றியையும் , மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து 11 மத்திய தொழிற் சங்கங்கள் நடத்த உள்ள செப்டம்பர் 2 ஆம் தேதி வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வேண்டிய அவசியத்தையும் , வேலை கலாச்சாரம் மாற வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார் . பிராட் பேண்ட் சந்தையில் நமது பங்களிப்பு முதல் ஸ்தானத்தில் இருந்து 3 ஆம் இடமாகியுள்ள சூழ்நிலையில் நமது நிறுவனத்தை சந்தையில் நிலை நிறுத்த வேண்டிய சூழ்நிலையை அவர் விளக்கினார் . மாவட்ட மட்ட சூழ்நிலைகள் பற்றி மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி தனது உரையில் சுட்டி காட்டினார் .மகாநாட்டை வாழ்த்தி மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் வெங்கடேஷ் , அஷ்ரப் தீன் , முத்துசாமி , தோழியர் பகவதி கிளை செயலர்கள் தோழர்கள் கருப்பசாமி, முத்துராமலிங்கம் , மாரியப்பா , சிங்கரவேல் ,ஓய்வூதியர் சங்க நிர்வாகி தோழர் பெருமாள்சாமி ஆகியோர் பேசினர் . செயலர் சமர்ப்பித்த ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கைகள் மகாநாட்டில் ஒப்புதல் பெறப்பட்டன . தோழர்கள் வெங்கடசாமி , சமுத்திரம் ,பொன்னுசாமி ஆகியோர் முறையே தலைவர் செயலர் மற்றும் பொருளராக தேர்வு செய்யப்பட்டனர் .புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கம் தன் புரட்சிகர நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
அன்பார்ந்த தோழர்களே வரும் 24/12/2019 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் 11 வது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர் ஜெயக்குமார் ,மாவட்ட தலைவர் தலைமையி...
No comments:
Post a Comment