பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் 5.2 சதவீத அளவுக்கு இருக்கிறது. இது மத்திய அரசுக்கு நெருக்கடியை அளிக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறார்.பட்டியலிடப்பட்ட 40 வங்கிகளின் டிசம்பர் மாதம் வரையிலான வாராக்கடன் 2.43 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டு முடிவுடன் ஒப்பிடும் போது மொத்த வாராக்கடன் 63,386 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு 16,610 கோடி ரூபாயாக இருக்கிறது.மார்ச் 31, 2013-ம் ஆண்டு முடிவில் 51,189 கோடி ரூபாய் வாராக்கடன் இருந்தது. அதனுடன் 32.40 சதவீதம் மொத்த வாராக்கடன் அதிகரித்து 67,799.33 கோடி ரூபாயாக இருக்கிறது.நிறுவனங்கள் மூலம் வரவேண்டிய கடன் தொகை 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி. மொத்தம் 406 நிறுவனங்கள். இதில், கிங் பிஷ்ஷெர் ஏர்லைன்ஸ் (2673 கோடி), மும்பை எஸ் குமார் ஜவுளி (1758 கோடி), ஸ்டெர்லிங் குழுமம் (3672 கோடி) ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை.
எத்தனையோ நிறுவனங்களில் (outstanding amount) நிலுவையை வசூலிக்க சிறப்பு குழுக்கள், சிறப்பு அமைப்புகள் வைத்து வசூல் செய்கிறார்கள். ஏன் வங்கிகள் அதுபோல் செய்யவில்லை? தனியாரிடம் வசூல் செய்ய விட்டு, வசூல் ஆகும் தொகையால் கமிசன் கொடுத்தால் பாதியாவது வந்திருக்குமே. இப்படி வாராக்கடனை, வரவே வராத கடன் ஆக்கியது ஏன்?கல்விக் கடன் கட்டாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பெயர்களையும், புகைப்படங்களையும் ஃபிளெக்ஸ் பேனரில் கட்டி அவமானப்படுத்துவதன் மூலம் வங்கித் துறையை பாதுகாப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை வங்கிகளும், வேண்டுமென்றே கடனை கட்டாமல், அவற்றை வாராக் கடனாக ஆக்கியிருக்கும் முதலாளிகளின் பெயரைக் கூட வெளியில் விடாமல் அவர்களது கௌரவத்தை காத்து வருகின்றன.ஏழை மாணவன் படிக்க கடன் கேட்டா, அரசு ஊழியர் ஜாமீன் வேண்டும். எழைகள் தொழில் தொடங்க கடன் கேட்டா, வீடு அடமானம் வைக்க வேண்டும். விவசாயி கடன் அடைக்கவில்லை என்றால் தூக்கு போட்டு சாகணும்.மேலே உள்ள நிறுவனங்கள் கடன் வாங்கும்போது யார் ஜாமீன் கொடுத்தார்கள்? யார் வீட்டை அடமானம் வைத்தார்கள்?
நன்றி: விகடன்
நன்றி: விகடன்
No comments:
Post a Comment