Friday, June 26, 2015

மாவட்ட செயற்குழு

4 வது மாவட்ட செயற்குழு கூட்டம் 25-06-2015 அன்று மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரகனி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தோழர் வெங்கடேஷ் , மாவட்ட உதவி செயலர் அவர்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி பேசினார் .அதன் பின் மாவட்ட செயலர் சமர்ப்பித்த ஆய்படு பொருள் ஏகமனதாக ஏற்றுகொள்ளபட்டு விவாதம் தொடங்கியது .மாவட்ட செயற்குழுவில் மூத்த தோழர் V சுப்ரமணியன் கௌரவிக்கபட்டார் .மாநில செயற்குழு மற்றும் டல்ஹௌசி   மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி மாநில உதவி செயலர் தோழர் .இந்திரா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.ஒப்பந்த ஊழியர்களின் விருதுநகர் கிளைமகாநாடும்    இன்  நிகழ்ச்சியோடு இணைந்து நடைபெற்றது .
மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் :
1. மாவட்டத்தில் JCM இல் கொண்டு செல்லப்பட்ட பிரச்சனைகள் தீர்விற்கு  காலதாமதம் செய்யும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் ,அருப்புகோட்டை மற்றும் ராஜபாளையம் CSC அதிகாரிகளின் வாடிக்கையாளர் மற்றும் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் மாவட்டம் முழுவதும் ஜூலை 8 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் , 13 ஆம் தேதி பெரும் திரள் முறையீடு .
2. 9,10,11 ம் தேதிகளில் ஊழியர் சந்திப்பு மற்றும் செப்டம்பர் 2 ஆம் நடைபெற உள்ள அகில இந்திய  வேலை நிறுத்த விளக்க பிரசாரம் நடத்துவது .
3. மேளா மற்றும் Roadshow களில் forum சார்பாக அனைத்து கிளைகளிலும் பங்கேற்பது .
4. JCM பிரச்சனைகளை வரும் 1 ஆம் தேதி நிர்வாகத்திடம் சமர்பிப்பது .
5. ஒப்பந்த ஊழியர் பற்றாக்குறை விசயமாக நிர்வாகத்திடம் பேசுவது .





















Displaying IMG_20150625_181525534.jpg




Displaying IMG_20150625_181722647.jpg

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...