Tuesday, June 9, 2015

25 ஆயிரம் ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்க ஹெச்.எஸ்.பி.சி. வங்கி முடிவு!

        
இது தான் முதலாளித்துவம் 
லாப வேட்டைக்கு ஊழியர்களை பழிவாங்கும் தனியார் நிறுவனங்கள் 
உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட ஹெச்.எஸ்.பி.சி. வங்கி நிர்வாகம், 25 ஆயிரம் பணியாளர்களை நீக்கி ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. 
பிரிட்டனில் மட்டும் சுமார் 8 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஹெச்.எஸ்.பி.சி.வங்கியில் உலகம் முழுவதுமாக மொத்தம் 2,66,000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.இங்கிலாந்தில் மட்டும் 47,500 ஊழியர்கள் இருக்கிறார்கள். ஊழியர்களை குறைக்க இருப்பதால் அதன் கிளைகளின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைய உள்ளது.பிரிட்டனில் இப்போது அவர்களுக்கு 1,050 கிளைகள் இருக்கின்றன. அதில் 20 கிளைகள் ஏற்கெனவே மூடப்பட்டு விட்டன. இன்னுமொரு 20 கிளைகளை அது மூட திட்டமிட்டிருக்கிறது.துருக்கி மற்றும் பிரேசிலில் தங்களது வர்த்தகத்தை விற்றுவிடவும் அவ்வங்கி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
                         நன்றி :- விகடன் செய்திகள்  

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...