Friday, June 12, 2015

ஜூன் 12: உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்...



எழுதுங்கள் புதிய விதி,
மாறட்டும்
மழலைகளின்
தலை விதி!!
பென்சில் ஏந்தும்
விரல்கள்,
இனி
பாத்திரம்
கழுவாமல் இருக்க,

புத்தக பை
தூக்கும் தோள்கள்
இனி
குப்பை மூட்டை
சுமக்காமல் இருக்க,

தாயின் மடியில்
தஞ்சம் அடைந்த
கண்மணிகள்
இனி
தெருக்களில்
தவிக்காமல் இருக்க,


நாளைய தலைமுறை,
உணவு விடுதியில்
மேசை துடைக்காமல்
இருக்க,
எட்டுக்கு பத்து
ஷ்பானெர்
கொடுப்பதை தடுக்க,


எடுப்பாகவும்,
துடுப்பாகவும்
என்
பாலகன்
பரிதவிக்காமல்
இருக்க,


எழுதுங்கள் புதிய விதி,
மாறட்டும்
மழலைகளின்
தலை விதி!!


மனதில்
கொள்ளுங்கள்,
ஒவ்வொரு
குழந்தை தொழிலாளி
உருவாகும் பொழுதும்,
நம் நாட்டின்
எதிர்காலம்
இருளுகிறது!!

ஒரு
சாதனையாளரை
இழக்கிறது!!


- முத்துகுமார் மாணிக்கம் நன்றி:- விகடன் 

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...