Wednesday, June 24, 2015

மக்கள் வரி பணத்தில் சலுகை விலையில் மட்டன் பிரியாணி ரூ.41, மசால் தோசை ரூ.6 என 78 உணவுகளை சாப்பிடும் எம்.பி.க்கள்


உலகில் பட்டினியால் வாடுபவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் 15 வது இடத்தில் இந்தியா உள்ளது. ஆனால் இந்திய பாராளுமன்ற கேண்டீனில் பாரளுமன்ற உறுப்பினர்களுக்காக தரமான உணவுகள் மானிய விலையில் மிக குறைந்த கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது. உலகில் வேறு எங்கும் கூட இந்த அளவுக்கு தரமான உணவுகள் இவ்வளவு மலிவாக கிடைக்குமா.தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறபட்டுள்ள தகவலில் கூறபட்டு உள்ளதாவது:-
மக்கள் வரிப்பணத்தில் 60 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை மானிய விலையில் இந்த உணவு வழங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்ற கேன்டீனுக்கு ரூ.60.7 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.மக்கள் மானியத்தை படிப்படியாக குறைத்து வரும் அரசு, நாடாளுமன்ற கேன்டீனுக்கு வழங்கப்படும் மானியத்தை மட்டும் குறைக்க முயற்சிக்கவில்லை. ஆண்டு தோறும் மானியம் அதிகரித்தே வருகிறது.
ஒவ்வொரு எம்.பியும் ரூ.1.4 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள் லட்சங்களில் சம்பளம், இலவச விமான, ரயில் பயணம், இலவச தங்குமிடம், இலவச மின் சாரம், இலவச தொலைபேசி, பாராளுமன்றம் நடந்தால் தினசரி பேட்டா என பல்வேறு சலுகைகளை அனுபவித்து வரும் எம்.பி.க் களுக்கு சாப்பாடு வகையிலும் மக்களின் வரிப்பணம் பெருமளவில் மானியமாக வழங்கப்படுவது அதிர்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது. வாயில் நீர் சுரக்கவைக்கும் 76 உணவு வகைகள் அங்கு மிககுறைந்தவிலையில் கிடைக்கிறது.


நாடாளுமன்ற கேன்டீனில் மானிய விலையில் எம்.பி.க்கள் சாப்பிடும் உணவுகளின் விவரமும் வெளியாகியுள்ளது. 


25ரூபாய்க்கு சிப்ஸுடன் மீன் பிரை, 
18 ரூபாய்க்கு மட்டன் கட்லெட், 
4 ரூபாய்க்கு அவித்த காய்கறிகள், 
33 ரூபாய்க்கு முழு அசைவ சாப்பாடு என சாப்பாடு பட்டியல் நீளுகிறது. அவித்த முட்டை முதல் பல்வேறு வகையான சிக்கன், மட்டன் உணவுகள் என மொத்தம் 76 வகையான உணவுகள் நாடாளு மன்ற கேன்டீனில் சமைத்து வழங் கப்படுகின்றன. இவற்றுக்கு அதிக பட்சமாக 150 சதவீதம் வரை மக்களின் வரிப்பணம் மானியமாக செல்கிறது.


நாடாளுமன்ற கேன்டீன் வரலாற்றில் இதுவரை இரண்டே இரண்டு முறைதான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் மிகக் குறைந்த அளவுக்கே உயர்ந்துள்ளது.ரூ.10.4 கோடி, 11.7 கோடி, 11.9 கோடி, 12. 5 கோடி மற்றும் 14 கோடி என 1009-10 2010-11,2012-13,2013-2014 மற்றும் தற்போதைய ஆண்டுக்கு என ரூ 60.7 கோடி மானியம் வழங்கபட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெறபட்டுள்ள தகவலில் கூறபட்டு உள்ளது.
                              நன்றி :- தின தந்தி 
கருத்துகள்
0

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...