சிவகாசி பொதுக்குழு கூட்டம் 16/02/2017அன்று கிளை தலைவர்கள் தோழர்கள் ராஜாராம் மனோகரன் மற்றும். ராஜமாணிக்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .FORUM முடிவுகளை அமல்படுத்துவது ,மாநில மாநாட்டு நன்கொடை ,ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் ,கிளை மாநாடு ஆகியவற்றை பொதுக்குழு விவாதித்தது .கிளை செயலர்கள் தோழர் முத்துசாமி மற்றும் தோழர் கருப்பசாமி அவர்கள் ஆய்படு பொருளை விளக்கி பேசினர் மாவட்ட தலைவர் தோழர் சமுத்திரக்கனி ஒப்பந்த ஊழியர் மாவட்ட செயலர் தோழர் ராமசந்திரன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர் .அதன் பின் பேசிய மாவட்ட செயலர் வரும் 31/03/2017 வரை ஒரு மணி நேர கூடுதல் பணி செய்வதின் அவசியத்தையும் ,வரும் மார்ச் 9 தேதி மாவட்ட ஆட்சி அலுவலகம் நோக்கிய பேரணியை வெற்றி அடைய செய்ய வேண்டிய நோக்கத்தையும் விரிவாக கூறினார் .கேபிள் பகுதி ஊழியர்களுக்கு SKILLED ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மார்ச் 10 ஆம் தேதி GM அலுவலகம் முன் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் .கிளை பொருளர் தோழர் இன்பராஜ் நன்றி நவின்றார் .
எடுக்கப்பட்ட முடிவுகள் :-
1. திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் ரோடு ஷோ நடத்துவது
2.புதன்கிழமை தோறும் லேண்ட் லைன் மற்றும் இணைய தள இணைப்புகளை பெற இயக்கம் நடத்துவது .
3.மாநில மாநாட்டு நன்கொடையாக தலா 100/- ரூபாய் உறுப்பினர்களிடம் வசூல் செய்வது
4. கிளை மாநாட்டை 24/06/2017 அன்று தோழர் ராஜமாணிக்கம் அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழாவுடன் இணைத்து நடத்துவது .
No comments:
Post a Comment