திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள இலஞ்சி என்ற இடத்தில் தோழர் பார்வதி நாதன் அரங்கில் AIBDPAசங்கத்தின் தமிழ் மாநில மாநாடு நடைபெற்றது. மாநில தலைவர் தோழர் S.மோகன் தாஸ் அவர்களின் தலைமையில் பிப்ரவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 350க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் S.செல்லப்பா மற்றும் தமிழ் மாநில செயலாளர் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோர் 21ஆம் தேதி கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நாகர்கோவில், தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்ட AIBDPA சங்கங்கள் இணைந்து நடத்திய அந்த மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட BSNL ஊழியர் சங்கம், மாவட்ட செயலாளர் தோழர் N.சூசை மரிய அந்தோணி தலைமையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தது அனைவராலும் பாரட்டப்பட்டது. இந்த மாநில மாநாட்டில் தோழர் P.மாணிக்க மூர்த்தி தலைவராகவும், தோழர் C.K.நரசிம்மன் மாநில செயலாளராகவும், தோழர் S. நடராஜா மாநில பொருளாளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய மாநில சங்கத்தின் பணி சிறக்க விருதுநகர் மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறோம்.













No comments:
Post a Comment