ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை பொது குழு கூட்டம் 20/02/2017 அன்று தோழர் வெங்கடசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .மறைந்த தோழர்களுக்கு மூத்த தோழர் தங்கவேலு நினைவஞ்சலி உரை நிகழ்த்த அனைவரும் 1நிமிடம் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்பின்னர் FORUM முடிவுகளை அமல்படுத்துவது , மாநில மாநாட்டு நண்கொடை ,ஸ்தல மட்ட பிரச்சனைகள் விரிவாக விவாதிக்க பட்டது .அனைத்து ஊழியர்களும் மார்க்கெட்டிங் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது .மார்ச் 9 பேரணியில் அனைவரும் பங்கேற்க உறுதி கூறப்பட்டது .இக் கூட்டத்தில் கிளை செயலர் சமுத்திரம் ,மாவட்ட சங்க உதவி செயலர் தோழர் தங்கதுரை ஆகியோர் உரை நிகழ்த்தினர் .கிளை பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறி பொதுக்குழுவை நிறைவு செய்தார் .




No comments:
Post a Comment