விருதுநகர் மாவட்ட FORUM கூட்டம் இன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் BSNLEU சார்பாக மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் ,மாவட்ட பொருளாளர் தோழர் சந்திரசேகரன் ,மாவட்ட உதவி செயலர் தோழர் .வெங்கடப்பன் ,விருதுநகர் OUTDOOR கிளை செயலர் மாரிமுத்து ,SNEA மாவட்ட செயலர் திரு செந்தில்குமார் ,அதன் மாவட்ட பொருளாளர் திரு செல்வராஜ் , AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் பிச்சைக்கனி ,அதன் மாவட்ட பொறுப்பாளர் தோழர் மணிகண்டன் ,AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர் .AIGETOA மணிலா சங்க நிர்வாகி விக்டர் சாம்சன் அருப்புக்கோட்டை செல்ல இருப்பதால் வரமுடியாத சூழ்நிலையை கூறினார் .06/02/2017 அன்று டெல்லியில் நடைபெற்ற FORUM கூட்ட முடிவுகளை நமது மாவட்டத்தில் முழுமையாக நடைமுறைப்படுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது .
1. வாரத்தில் இரண்டு நாட்கள் ரோடு ஷோ நடத்துவது .
2.பிரதி வாரம் வெள்ளிக்கிழமை அன்று லேண்ட் லைன் ,பிராட் பேண்ட் இணைப்புகளை பெற இயக்கம் நடத்துவது .
3.பிரதி வாரம் சனிக்கிழமை அன்று EB பிசினஸ் விஷயமாக கேன்வாஸ் செய்வது .இதற்கு தோழர்கள் பிச்சைக்கனி ,செந்தில்குமார் ,மணி கண்டன் ,செல்வராஜ் ,நமது மாவட்ட சங்க உதவி செயலர் தோழர் ஜெயக்குமார், நமது அருப்புக்கோட்டை தோழர் ராஜ்மோகன் ஆகியோர் உதவிகரமாக இருப்பர் .
சிம் விற்பனை மற்றும் தரைவழி இணைப்புகளை பெறுவதற்கு BSNLEU ஊழியர் சங்கம் தனது முழு ஒத்துழைப்பை தருவது .
மார்ச் 9 பேரணியை முழு உற்சாகத்தோடு நடத்துவது .
கலந்து கொண்ட அனைவருக்கும் நமது சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment