இன்று (26-08-2014) நமது பி எஸ் என் எல் ஊழியர் சங்க மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பு மாவட்ட செயற்குழு நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் A.சமுத்திரகனி அவர்கள் தலைமை தாங்கினார். கிளை செயலர்கள் அனைவரும் மாநில மகாநாட்டு வசூலை நிறைவு செய்ய மாவட்ட செயற்குழு வலியுறுத்தி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை முழுமையாக வசூலை நிறைவு செய்தமைக்கு கிளை செயலர் தோழர் சமுத்திரம் அவர்களை மாவட்ட செயற்குழு வெகுவாக பாராட்டியது. இதுவரை வசூலான தொகையான 40,000/- ரூபாயை மாநில சங்கத்திடம் உடனடியாக கொடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 30-08-2014 அன்று நடைபெற உள்ள விரிவடைந்த மாவட்ட செயற்குழுவிற்கு பெருமளவில் ஊழியர்களை திரட்டுவது என அனைவரையும் மாவட்ட செயற்குழு கேட்டு கொண்டது. அமைப்பு ரீதியான பிரச்சனைகளை கையாள உடனடி நடவடிக்கைகளை எடுப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 30-08-2014 அன்று நடைபெற உள்ள செயற்குழுவில் " மாறியுள்ள சூழலில் வணிக யுக்திகள் " என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ESI அட்டை வழங்கும் நிகழ்ச்சியும், குடும்ப விழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஊழியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வும் விரிவடைந்த செயற்குழுவில் நடைபெற உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்
11 வது மாவட்ட செயற் குழு கூட்டம் 24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...
-
தோழர் மாரிமுத்து தலைமை உரை மாவட்ட செயலர் தோழர் முருகேசனுக்கு சந்தன மாலை அணிவிப்பு தோழியர் தனலக்ஷ்ம...
-
வரும் 28 ஆம் தேதி விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் மற்றும் TNTCW சங்க மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் A ஜெயபாண்டியன் ,கிளை செயலர் OCB கிளை...
-
விருதுநகர் பி எஸ் என் எல் ஊழியர் சங்க 9 வது மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 10 ம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் சங்க அலுவலகத்தில் நமது ம...
No comments:
Post a Comment