இரண்டாம் சுதந்திரம் வென்றிடுவோம்
வெள்ளையன் அன்றே கொடுத்திட்டான்
சுதந்திரம் என்றே களித்திட்டோம்
கொள்ளையர் கையில் அகப்பட்டோம்
தந்திர வலையில் விழுந்திட்டோம்
பொது நலமென்றே உரைத்திடுவார்
பொய்கள் பல புனைந்திடுவார்
சுயநலம் ஒன்றே கொண்டிடுவார்-(சுதந்திர)
கைகளை இங்கே கட்டிடுவார்
காடுகள் எல்லாம் அழித்திடுவார்
கனிம வளங்களை விற்றிடுவார்
ஏடுகள் சொல்வது பொய்யென்பார்
இனிதே மறக்க செய்திடுவார்
ஜாதிகள் இங்கே இல்லை என்பார்
சமத்துவமே கொள்கை என்பார்
நீதி நெறிகளை மறந்திடுவார்
மிக ஜாதி அரசியலே செய்திடுவார்
ஏழ்மையை ஒழிப்போம் என்பார்
எதிலும் வளர்ச்சி என்பார்
ஊழலை உரமிட்டு வளர்ப்பார்
அதிலும் முதலிலே நிற்பார்
வெள்ளையன் அன்றே கொடுத்ததனை
முதலாம் சுதந்திரம் என்றிடுவோம்
கொள்ளையர் பிடியில் விடுபட்டு
இரண்டாம் சுதந்திரம் வென்றிடுவோம்.
நன்றி :-கும்மாச்சி ஆன்லைன் .காம்
No comments:
Post a Comment