ஆளப்போவது யார் ?
நரேந்திர மோடி பதவி யேற்பு விழாவில் இந்தியாவின் அனைத்து முக்கிய பெருமுதலாளிகளும் பங் கேற்றனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா, முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர், இவர்களது தாயார் கோகிலா பென் அம்பானி ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர். மோடியின் அனைத்துப் பிரச்சாரத்திற்கும் பணத்தை கொட்டி வரும் அடானி குழுமத்தின் தலைவர் கவுதம் அடானி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
மிட்டல் குழுமத்தின் சகோதரர்கள் சுனில், ராஜன், ராகேஷ் ஆகியோரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்துஜா தொழில் குழுமத்தின் தலைவர் அசோக் இந்துஜா, எஸ்ஸார் குழுமத்தின் தலைவர் சசில் ரூயா, அதன் தலைமை நிர்வாகி பிரசாத் ரூயா,டி.எல்.எப். நிறுவன துணைத் தலைவர் ராஜிவ் சிங், ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் தலைவர் பவன் முன்ஜல், வீடியோ கான் குழுமத்தின் தலைவர் ராஜ்குமார் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தலைவர் நரேஸ் ஜோயல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.பெரும்பாலான தனியார் வங்கிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.தகவல் தொழில்நுட்பத் துறை உள்பட பல்வேறு தொழில்துறை முதலாளிகள் கலந்து கொண்டனர்.இவ் விழாவில் பங்கேற்காத நபர்களில் முக்கியமானவர் டாடா குழுமத்தின் கவுரவத் தலைவர் ரத்தன் டாடாவும், அந்நிறுவனத்தின் தலைவரான சைரஸ் மிஸ்திரியும் ஆவார். இவர்கள் வெளிநாடு சென்றிருப்பதால் பங்கேற்வில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லய்யா, குமார் மங்கலபிர்லா ஆகியோரும் வெளி நாடு சென்றிருப்பதால் பங்கேற்கவில்லை. புதிய அரசு பதவியேற்பில் நாட்டின் பெரும்பாலான பெரும் முதலாளிகளும் குடும்பம் குடும்பமாக பங்கேற்றிருப்பது இதுவே முதல்முறை.
<நன்றி :- தீக்கதிர்>
.
No comments:
Post a Comment