ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி, சிங்கப்பூரைச் சேர்ந்த மதுபான முதலீட்டாளரான ரவி விஸ்வநாதன் உடன் இணைந்து சூலா வைன்ஸ் நிறுவனத்தின் 30 சதவிகிதப் பங்குகளை சுமார் 200 கோடி ரூபாய்க்கு வாங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி கேஎஃப்சி போன்ற வறுத்த சிக்கன் வியாபாரத்தை துவங்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. உண்மையிலே இது நல்ல காம்பினேஷன் தான். தம்பி சரக்கு வியாபாரம், அண்ணன் சிக்கன் வியாபாரம். தி எகனாமிக் டைம்ஸ் நாளிதழ், வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் பெரும் மதுபானத் தயாரிப்பாளரான சூலா வைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறுவனமாகிய நாசிக் வின்ட்னர்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளரான எவர்ஸ்டோன் ப்ரைவேட் ஈக்விடியின் 30 சதவிகிதப் பங்குகளை வாங்க அனில் அம்பானியும் விஸ்வநாதனும் அணி சேர்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
<நன்றி : ஒன் இந்தியா >
No comments:
Post a Comment