ஓவியமும் ஓவியனும் |
உலகப்புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியரான வியொனார்டோ டா வின்சி தன்னுடைய மோனோலிசா மற்றும் கடைசி விருந்து (last supper) என்ற ஓவியங்களால் உலகப் புகழ் பெற்றவர். தன்னுடைய ஓவியங்களுக்குள் குறிகளையும் குறியீடுகளையும் ஒளித்துவைத்து வரலாற்றை புதிய பாதைக்குத் திருப்பியர் இவர் என்றும், நவீன ஓவியத்தில் மூலகர்த்தாக்களில் ஒருவரான இவர் கணக்கீடுகளை ஓவியங்களுக்குள் ஒளித்து வைத்திருந்தார் என்றும் சொல்லுவார்கள். இவர்ஓவியர் மட்டுமல்ல, கட்டிடக் கலைஞர், சிற்பி, பொறியாளர், கண்டுபிடிப்பாளர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். இவர் வாழ்ந்த காலம் 1452 முதல் 1519. ஆம் 495 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் இறந்துவிட்டார். ஆனால் இன்னும் வரலற்றின் பக்கங்களில் வாழ்கிறார்.
- மே 2 லியொனாட்டோ டா வின்சி நினைவு நாள்
No comments:
Post a Comment