BSNL ஊழியர் சங்கத்தின் காசியாபாத்
மாவட்டச் செலாளர் தோழர் சுகேந்தர் பால்சிங், மாவட்டத்தின் பொதுமேலேளர் ஆதேஷ்
குமார் குப்தா மற்றும் அவருடைய அடியாட்கள் நால்வரால் பொதுமேலாளரின் தனியறையில்
வைத்துக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார். தலையில ஏற்பட்ட பலத்த
காயத்தினால் இறப்பு நேர்ந்துள்ளது. பொதுமேலாளர் ஆதேஷ் குமார் மற்றும் அவரது
அடியாட்கள் நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 147 மற்றும் 302 ஆகிய
இரண்டு பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. ஆனால் நவம்பர் 9 ஆம் நாள்வரை (19 நாட்களுக்குப் பிறகும்)
குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. பொதுமேலாளரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்கள்
அன்றாட வேலைகளில் சொகுசாக இருந்து வந்துள்ளனர்.
நமது மத்திய சங்கம் தொலைத்
தொடர்புத் துறையையும், CMD BSNL ஆகியோரை மட்டுமல்லாது மான்புமிகு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு.
கபில் சிபில் அவர்களிடமும் இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றது. BSNLற்கு விருப்பம் தெரிவிக்காத ITS அதிகாரிகளில்
ஒருவரான ஆதேஷ் குமாரை DOTக்கு திரும்ப எடுத்துக் கொள்வதுகூட
குறைந்தபட்சமாக நடைபெறவில்லை. தொலைத் தொடர்புத் துறையும் BSNLம் ஆதேஷ் குமாரை குற்றவியல் நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுவதற்கான முயற்சி
செய்கின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இனியும் இதனை அனுமதிக்க முடியாது.
முதல் தகவல் அறிக்கை தாக்கல்
செய்யப்பட்டாலும்கூட காஜியாபாத் காவல்துறை இதுவரை ஆதேஷ் குமாரை தொடாததற்கான காரணம்
ஒவ்வொருவரும் அறிந்ததே. காஜியாபாத் பொதுமேலாளராக இருந்து முறைகேடான வழிகளில்,
ஊழலில் ஈட்டிய பணத்தை தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக அவர் செலவழித்து வருகிறார்.
காஜியாபாத் காவல் கண்காணிப்பாளர்
அலுவலகத்தை நோக்கிப் பேரணியும், கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்னர் ஆர்பாட்டமும்
செய்வதென்ற BSNLEU வின்
முடிவின்படி 2012 நவம்பர் 9ஆம் நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
“உடனடியாக குற்றவாளிகளைக் கைது
செய்ய வேண்டும். காவல் துறைக்கும் குற்றவாளி ஆதேஷ் குமார் குப்தாவிற்கும் இடையிலான
உறவை அம்பலப்படுத்த வேண்டும்.” என்ற முழக்கத்தைக்
கோரிக்கையாக வைத்து இயக்கம் நடத்தப் பெற்றது.
நமது
BSNLEU சங்கத்தின் பொதுச்செலாளர்
தோழர் P.அபிமன்யூ, தலைவர் தோழர் V.A.N.நம்பூதிரி இருவரும்
பேரணியை முன்னின்று நடத்தி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கினார்கள்.
No comments:
Post a Comment