பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் மலாலா. இவர் பெண்களின் கல்விக்காகவும், தலிபான்களுக்கு எதிராகவும் போராடினார்.
இதனால் கடந்த மாதம் 9ஆம் திகதி மலாலா மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த மலாலா, தற்போது இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மலாலாவை கௌரவப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி மலாலா தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் நேற்று அறிவித்தார்.
இதை பாகிஸ்தான் மக்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். இஸ்லாமாபாத், கராச்சி, லாகூர் உள்பட பல நகரங்களில் மக்கள் மலாலா தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். சிறப்பு பிரார்த்தனைகள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. பல நகரங்கள் விழா கோலம் பூண்டிருந்தன. நாமும் வாழ்த்துவோம் மலாலாவை .
No comments:
Post a Comment