இந்திய பொதுத்துறை வரலாற்றில் பரந்துபட்ட ஒற்றுமையை உருவாக்கி வீரஞ்செறிந்த தொடர் போராட்டங்களை நடத்தி BSNL நிறுவனத்தைக் காத்திடும்
பேரியக்கமாம் BSNL ஊழியர் சங்கத்தின் 2 ஆவது மாநில செயற்குழு
கூட்டம் வருகின்ற டிசம்பர் மாதம், விருதுநகரில் நடைபெற
உள்ளது. அன்று மாலை 5 மணி அளவில் புதிய தொலைபேசி
நிலைய வளாகத்தில் நமது அனைத்திந்திய செயலர் தோழர் P.அபிமன்யு மற்றும் நமது மாநில செயலர் தோழர் S.செல்லப்பா அவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. செயற்குழுவை நடத்துவதும் சிறப்புக் கூட்டத்தை
நடத்துவதும் மிகப் பெரிய பணியாக இருப்பதால் தோழர்களின் உழைப்பும் நிதிஉதவியும்
அவசியம். 6 ஆவது சரிபார்ப்புத்
தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் இந்தக்
கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நமது தோழர்கள்
அனைவரும் சிறப்பான பங்கேற்பை அளிக்க வேண்டும்.
2012 நவம்பர் 9ஆம் தேதி மாலை நடைபெற்ற மாவட்ட செயற்குழுவின்
ஒப்புதலுடன் கிளைகளுக்கான பங்குத்தொகை கீழ்கண்டவாறு நிர்ணயிக்கபட்டுள்து.
விருதுநகர் = 10,000
சிவகாசி = 15,000
திருவில்லிபுத்தூர் = 4,000
சாத்தூர் = 2,000
அருப்புகோட்டை = 2,500
ராஜபாளையம் = 5,000
நிர்ணயித்த இலக்கிற்குக் கூடுதலாக வசூல் செய்யும் கிளைகள் அந்தத் தொகையை கிளைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்
கொள்ளலாம்.
No comments:
Post a Comment