11 வது மாவட்ட செயற்குழு மற்றும் தோழர் K.புளுகாண்டி அவர்களின் பனி ஓய்வு பாராட்டு விழா 30-08-2013 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் மிக சிறப்பாய் மாவட்ட தலைவர் தோழர் Aசமுத்திரகனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. லோக்கல் கவுன்சில், மற்றும் வொர்க் கமிட்டி பிரச்சனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. கீழ்கண்ட முடிவுகள் எடுக்க பட்டுள்ளன.
1. அடுத்த மாவட்ட மகாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்துவது .
2. அடுத்த மாவட்ட செயற்குழு கூட்டம் டிசம்பர் மாதத்தில் சிவகாசியில் நடத்துவது .
3. ஜாதிய மோதல்களை தூண்டும் போக்கை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் 13-09-2013 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை மாவட்ட சங்கம் சார்பாக நடத்துவது .
4. தோழர்கள் Mபெருமாள்சாமி, Kபுளுகாண்டி மற்றும் த.முத்துராமலிங்கம் அவர்கள் மாவட்ட பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பதிலாக தோழர் C சந்திரசேகரன், மாவட்ட உதவி செயலராகவும், தோழியர் P.பகவதி அவர்கள் மாவட்ட துணை தலைவராகவும், தோழர் அனவரதம் அவர்கள் மாவட்ட அமைப்பு செயலராகவும் செயற்குழுவின் ஒப்புதலோடு நியமிக்கபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment