Friday, August 9, 2013

வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.1.14 கோடி அபராதம்

அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தை மீறல்:
வால்மார்ட் நிறுவனத்துக்கு ரூ.1.14 கோடி அபராதம் 


          உலகம் முழுவதும் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் பகாசுர நிறுவனம் வால்மார்ட். இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமது வழங்கி உள்ளது. அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்துக்கு நியூயார்க் உள்பட 9 மாநிலங்களில் சில்லரை வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மிக குறைவான சம்பளம் தான் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் மைக்கேல் டியூக் ஆண்டுக்கு ரூ.124 கோடி சம்பளம் பெறுகிறார். ஆனால் வால்மார்ட்டில் வேலைபார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளிக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 528 மட்டும் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இப்படி தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்படாமல், எந்த சலுகையும் அளிக்கப்படாமல் கசக்கி பிழியப்படுகிறார்கள். மேலும் இவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சரியான சுகாதார வசதி மற்றும் பாதுகாப்பு வசதி செய்யப்படவில்லை என்று புகார்கள் வந்தன.

          இதை தொடர்ந்து நியூயார்க், கேட்ஸ் மாநிலங்களில் உள்ள வால்மார்ட் நிறுவன தொழிலாளர்கள் தங்கி இருந்த இடங்களில் தொழிலாளர்கள் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தொழிலாளர்களுக்கு வால்மார்ட் நிறுவனம்,மிக குறைவான சம்பளம் மற்றும் சுகாதார வசதியோ, பாதுகாப்பு வசதியோ செய்யாமல் சட்டத்தை மீறி செயல்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து வால்மார்ட் நிறுவனத்துக்கு அமெரிக்க தொழிலாளர்துறை ரூ. ரூ.1.14 கோடி அபராதம் விதித்துள்ளது.

செய்தி : தீக்கதிர்

          இப்படி சொந்த நாட்டிலேயே ஏமாற்றுகிற கொள்ளைக்காரர்கள் வந்தால்தான் நமது நாட்டில் தொழிலாளர்களும் விவசாயிகளும் சுபிட்சமாக வாழ்வார்கள் என்று நமது நாட்டில் முதலாளித்துவக் கட்சிகளின் ஜனநாயக ஜாம்பவான்கள் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

11 வது மாவட்ட செயற் குழு கூட்டம்

11 வது  மாவட்ட செயற் குழு  கூட்டம்  24/12/2019 அன்று விருதுநகரில் மாவட்ட  தலைவர் தோழா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் VR...